search icon
என் மலர்tooltip icon

    கணினி

    5 நிமிடங்களில் முழு சார்ஜ் - 300 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் அறிமுகம் - ரெட்மி அதிரடி!
    X

    5 நிமிடங்களில் முழு சார்ஜ் - 300 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் அறிமுகம் - ரெட்மி அதிரடி!

    • ரெட்மி பிராண்டின் புதிய அதிவேக சார்ஜர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
    • ரெட்மியின் புதிய ஃபாஸ்ட் சார்ஜர் ஸ்மார்ட்போனை ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடுகிறது.

    210 வாட் சார்ஜரை அடுத்து ரெட்மி பிராண்டு 300 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு ரெட்மி புகதிய சார்ஜப் ஸ்மார்ட்போனினை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறது.

    300 வாட் இம்மார்டல் செகண்ட் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை ரெட்மி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த சார்ஜரின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ரெட்மி பிராண்டு 4100 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மாடிஃபை செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வீடியோவினை வெளியிட்டு உள்ளது. இதற்காக ரெட்மி பிராண்டு 4300 எம்ஏஹெச் பேட்டரிக்கு மாற்றாக 4100 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இருக்கிறது.

    வீடியோவில் ஸ்மார்ட்போன் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 2 நிமிடங்கள் 11 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. புதிய அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்களை ரெட்மி பின்னர் வெளியிடுவதாக அறிவித்து இருந்தது. இதுகுறித்த வெய்போ பதிவில், "நோட் 12 ப்ரோ பிளஸ் மேஜிக் வெர்ஷனில் 300 வாட் சார்ஜிங் டெஸ்ட் இது, " என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ரெட்மி பிராண்டின் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் ரெட்மி போன் 300 வாட் வயர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இது ஸ்மார்ட்போனினை 10 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 43 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. இந்த சார்ஜருடன் வரும் அடாப்டரில் இரண்சு GaN தொழில்நுட்பங்கள் உள்ளன. மேலும் இதில் 50-க்கும் அதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக ரெட்மி தெரிவித்து இருக்கிறது. 300 வாட் சார்ஜர் என்ற போதிலும், வீடியோவில் இது அதிகபட்சமாக 290 வாட் அளவையே எட்டி இருக்கிறது.

    புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 240வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் பத்து நிமிடங்களுக்குள் முழு சார்ஜ் ஆகிவிடும்.

    Next Story
    ×