search icon
என் மலர்tooltip icon

    கணினி

    இந்தியாவில் புதிய 4K ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்த சோனி
    X

    இந்தியாவில் புதிய 4K ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்த சோனி

    • புதிய சோனி பிரேவியா XR X90L மாடல் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது.
    • சோனி பிரேவியா X90L மாடலில் காக்னிடிவ் XR பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பிரேவியா XR X90L சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்களில் மேம்பட்ட காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கின்றன. பிரேவியா XR OLED A80L சீரிஸ் மாடல்களை தொடர்ந்து புதிய ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள காக்னிடிவ் XR பிராசஸர் காட்சி மட்டுமின்றி, சிறப்பான ஆடியோ அனுபவத்தையும் வழங்குகிறது. முற்றிலும் புதிய சோனி பிரேவியா XR X90L மாடல் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இந்த டிவி மாடல் தனித்துவம் மிக்க எல்இடி ஜோன்கள், சிறப்பான கான்டிராஸ்ட் வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் XR 4K அப்ஸ்கேலிங் மற்றும் XR சவுன்ட் பொசிஷன், டிவி பார்க்கும் போது ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆம்பியனட் ஆப்டிமைசேஷன் பிரைட்னசை அட்ஜஸ்ட் செய்து, ஆட்டோ HDR டோன் மேப்பிங் செய்து பிளே ஸ்டேஷன் 5 கேமிங்கை ஆப்டிமைஸ் செய்கிறது.

    இந்த டிவியில் கேம் மெனு வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் VRR மற்றும் மோஷன் பிளர் ரிடக்ஷன் செட்டிங்களை கஸ்டமைஸ் செய்ய முடியும். கூகுள் டிவி இன்டர்ஃபேஸ் மூலம் அதிக செயலிகள், தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்குகிறது. இத்துடன் வாய்ஸ் சர்ச் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சோனி XR 55X90L மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 என்றும் சோனி XR- 65X90L மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    சோனி XR-75X90L மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சோனி தெரிவித்து உள்ளது. புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை சோனி சென்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள், ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×