என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கணினி
![விரைவில் விற்பனைக்கு வரும் சோனி PS5 ஸ்லிம் விரைவில் விற்பனைக்கு வரும் சோனி PS5 ஸ்லிம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/08/1788423-sony-ps5.jpg)
விரைவில் விற்பனைக்கு வரும் சோனி PS5 ஸ்லிம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சோனி நிறுவனம் தனது PS5 மாடலின் புது வேரியண்ட் விற்பனைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மேலும் புதிய சோனி PS5 வேரியண்ட் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
சோனி நிறுவனம் PS5 கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து சில ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த நிலையில், சோனி தனது PS5 மாடலின் புது வெர்ஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புது வெர்ஷன் சோனி PS5 ஸ்லிம் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி PS5 ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் புதிய PS5 வெர்ஷனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடல் மிக மெல்லியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/11/08/1788421-sony-ps5-1.jpg)
2023 வாக்கில் சோனி PS5 ஸ்லிம் அறிமுகமாகும் என்ற தகவல் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. PS5 புது வெர்ஷனில் டிஸ்க் டிரைவ் வழங்கப்படும் என தெரிகிறது. சோனி PS5 அறிமுகமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதற்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. பயனர்கள் இன்றும் சோனி PS5 மாடலை வாங்க முற்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தான் சோனி PS5 மாடலின் விலை ஐரோப்பா, லண்டன், ஜப்பான் என உலகின் பல்வேறு நாடுகளில் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி மாற்றம் என பல்வேறு காரணங்களே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.