search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங்கிற்கு போட்டியாக பிக்சல் ஃபோல்டு - கூகுள் திட்டம்!
    X

    சாம்சங்கிற்கு போட்டியாக பிக்சல் ஃபோல்டு - கூகுள் திட்டம்!

    • கூகுள் நிறுவனம் பிக்சல் ஃபோல்டு பெயரில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி பற்றி புது தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. பிக்சல் ஃபோல்டு பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல்களின் படி கூகுள் நிறுவன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    வினியோக பிரிவு சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு உற்பத்தி பணிகள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு ஆகும். சாம்சங் டிஸ்ப்ளே வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல்களுக்கான முன்பதிவு கிடைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.57 இன்ச் OLED பிரைமரி டிஸ்ப்ளே, 5.6 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை தொடர்ந்து அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக சாம்சங் விளங்குகிறது.

    அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் மாடல்களிடம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து வெளியாகும் போது பிக்சல் ஃபோல்டு விற்பனை பெருமளவு பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் ஃபோல்டு பற்றிய விவரங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14L ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×