search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    வேற லெவல் அப்கிரேடுகள்.. அசத்தலாக ரெடியாகும் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ்..?
    X

    வேற லெவல் அப்கிரேடுகள்.. அசத்தலாக ரெடியாகும் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ்..?

    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும்.

    ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 சீரிசின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    புது ஐபோன் மாடல்கள் ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் சீரிஸ் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மாடல் அளவில் பெரிய மற்றும் பிரகாசமான ஸ்கிரீன், சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பெரிய OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் 6.7 இன்ச் திரையில் இருந்து அதிகரித்துள்ளது. கூடுதலாக, இரண்டு மாடல்களும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் உள்ளது.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும். இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A17 ப்ரோ சிப்பை விட கணிசமான செயல்திறன் மேம்பாடுகளை உறுதியளிக்கும்.

    கூடுதலாக, ஆப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கேமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் சமீபத்திய வைபை 7 தரநிலையை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்புகளை வழங்குகிறது.

    விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×