search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    யூடியூப், UPI வசதியுடன் புதிய கீபேட் மொபைல் போன் அறிமுகம்
    X

    யூடியூப், UPI வசதியுடன் புதிய கீபேட் மொபைல் போன் அறிமுகம்

    • முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
    • இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.


    ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×