search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    முற்றிலும் புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    முற்றிலும் புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் குறைந்த விலையில் நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் மெல்லிய நார்டிக் டிசைன், 5MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா C02 பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா C02 மாடலில் 5.45 இன்ச் FWVGA பிளஸ் ஸ்கிரீன், குவாட் கோர் யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், 5MP பிரைமரி கேமரா, 2MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெல்லிய நார்டிக் டிசைன் கொண்டிருக்கும் நோக்கியா C02 மாடலில் 3000 எம்ஏஹெச் பேட்டரி, 5 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கியா C02 அம்சங்கள்:

    5.45 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே

    1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் யுனிசாக் பிராசஸர்

    2 ஜிபி ரேம்

    32 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

    டூயல் சிம்

    5MP பிரைமரி கேமரா

    2MP செல்ஃபி கேமரா

    3.5mm ஜாக், எஃப்எம் ரேடியோ

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் IP52

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2

    மைக்ரோ யுஎஸ்பி

    3000 எம்ஏஹெச் பேட்டரி

    5 வாட் சார்ஜிங்

    புதிய நோக்கியா C02 ஸ்மார்ட்போன் டார்க் சியான் மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் வலைப்பக்கம் நோக்கியா இந்தியா வலைதளத்தில் துவங்கப்பட்டு விட்டது.

    Next Story
    ×