search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
    X

    விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 ஸ்மார்ட்போன் நவம்பர் 09 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 90Hz AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 8 ஜிபி வரையிலான ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கும் என ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது.

    முன்னதாக புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போனிற்கான டீசரில் 3.5mm ஆடியோ ஜாக், பல்வேறு நிறங்கள் மற்றும் கிரேடியண்ட் பினிஷ் உள்ளிட்ட அம்டசங்கள் ரியல்மி 10 மாடலில் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ரியல்மி 10 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    Arm மாலி-G57 MC2 GPU

    4 ஜிபி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0

    50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP கேமரா

    16MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதுதவிர ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×