search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரியல்மி 10 ப்ரோ அறிமுகம்
    X

    ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரியல்மி 10 ப்ரோ அறிமுகம்

    • ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 18 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.
    • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ரியல்மி 10 ப்ரோ 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் சற்றே குறைந்த விலையில் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரியல்மி 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், மிக மெல்லிய பெசல்கள், DC டிம்மிங், TUV ரெயின்லாந்து லோ புளூ லைட் சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 2D ஃபிரேம் டிசைன், ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமரா, 8.1mm பாடி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 29 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும்.

    ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள்:

    6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ வளைந்த LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹைப்பர்ஸ்பேஸ் கோல்டு, டார்க் மேட்டர், நெபுலா புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்களிலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் துவங்குகிறது.

    Next Story
    ×