search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    200MP பிரைமரி கேமராவுடன் அடுத்த மாதம் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்
    X

    200MP பிரைமரி கேமராவுடன் அடுத்த மாதம் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்

    • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
    • புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சில வாரங்களுக்கு முன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்திய வெளியீட்டு தேதியை சியோமி அறிவித்துள்ளது. முன்னதாக சீன சந்தையில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 200MP 1/1.4-இன்ச் சாம்சங் HMX சென்சார், 2.24μm மற்றும் 16-இன்-1 பிக்சல் பின்னிங் பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் OIS, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சர்ஜிங் P1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். இந்த ஸ்மார்ட்போனுடன் 120 வாட் GaN சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. வரும் வாரங்களில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×