search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    கேலக்ஸி Z ப்ளிப் 5 முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பரிசு.. லீக் ஆன சாம்சங் திட்டம்!
    X

    கேலக்ஸி Z ப்ளிப் 5 முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பரிசு.. லீக் ஆன சாம்சங் திட்டம்!

    • கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் டைனமிக் AMOLED, Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
    • கேலக்ஸி வாட்ச் 6 சீரிசை முன்பதிவு செய்வோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுடன் கேலக்ஸி Z போல்டு 5, கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் என்று பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலை முன்பதிவு செய்வோருக்கு இலவசமாக ஸ்டோரேஜ் அப்கிரேடு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று கேலக்ஸி வாட்ச் 6 சீரிசை முன்பதிவு செய்வோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக பிரபல டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

    புதிய சாம்சங் நிறுவன சாதனங்கள் பற்றிய தகவலை டிப்ஸ்டரான எவான் பிலாஸ் தனது திரெட்ஸ் ஆப்-இல் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஸ்டோரேஜ் அப்கிரேடு செய்து கொள்ளும் வசதி இலவசமாக வழங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி 256 ஜிபி மாடலுக்கு பணம் செலுத்தினால் 512 ஜிபி மாடலை பெற்றுக் கொள்ள முடியும். இதே சலுகை கேலக்ஸி Z போல்டு 5 மாடலுக்கும் பொருந்துமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. கேலக்ஸி வாட்ச் 6 மாடல்களை முன்பதிவு செய்யும் போது ஃபேப்ரிக் பேன்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் டைனமிக் AMOLED மற்றும் Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    Next Story
    ×