என் மலர்
மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
- சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
- இது சியோமியின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சியோமி 13 மாடல் சீன சந்தையிலேயே அடுத்த மாதம் தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், சியோமி 13 மாடல் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி 13 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. தற்போது பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் சியோமி 13 மாடல் 2210132G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. வழக்கம்போல் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் எதுவும் பிஐஎஸ் தளத்தில் இடம்பெறவில்லை.
எனினும், இந்த ஸ்மார்ட்போன் எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாவது மட்டும் உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக சியோமி 13 மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன் பின் இந்தியா வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி 13 ஸ்மாரட்போன் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் 6.2 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 50MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர இணையத்தில் வெளியான ரெண்டர்களின் படி சியோமி 13 ஸ்மார்ட்போன் ஃபிளாட் சர்ஃபேஸ், கூர்மையான எட்ஜ் மற்றும் மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் இதன் மேல்புறத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் பெட்டி போன்ற தோற்றம் பெறும் வகையில், அதன் ஓரங்களில் வளந்த டிசைனுக்கு மாற்றாக ஃபிளாட் சர்ஃபேஸ் காணப்படுகிறது. மேலும் இதில் மேம்பட்ட கேமரா மாட்யுல் உள்ளது. சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுலில் மொத்தம் நான்கு சென்சார்கள் உள்ளது.
Photo Courtesy: OnLeaks x Comparedial






