search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விரைவில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் அமேஸ்பிட்
    X

    விரைவில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் அமேஸ்பிட்

    • அமேஸ்பிட் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக இருக்கிறது.
    • அமேஸ்பிட் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பாப் 2 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் புது ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த மாடல் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. டீசர்களின் படி புதிய அமேஸ்பிட் பாப் 2 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, செவ்வக வடிவம், மெட்டல் ரிம் கேஸ், வட்ட வடிவில் ஒற்றை டயல் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    அமேஸ்பிட் பாப் 2 மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ப்ளூடூத் காலிங் வசதி இருக்கும். இதை கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் வாட்ச்-ஐ கனெக்ட் செய்தால் அழைப்புகளை எளிதில் மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். இந்த அம்சம் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த நிலை மெல்ல மாறி பட்ஜெட் வாட்ச் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

    இவைதவிர அமேஸ்பிட் பாப் 2 மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என டீசரில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் முழு திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், அதிகபட்சம் 150-க்கும் வாட்ச் ஃபேஸ்கள், ஆக்சிஜன் மாணிட்டர், 24 மணி நேர இதய துடிப்பு மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×