search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விரைவில் இந்தியா வரும் அசுஸ் கையடக்க கேமிங் கன்சோல்
    X

    விரைவில் இந்தியா வரும் அசுஸ் கையடக்க கேமிங் கன்சோல்

    • இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
    • அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு.

    அசுஸ் நிறுவனம் தனது கையடக்க கேமிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய அசுஸ் ரோக் Ally இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அசுஸ் ரோக் Ally மாடல் ஜப்பான், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அசுஸ் ரோக் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரோக் Ally மாடலுக்கான டீசர் ட்விட் செய்யப்பட்டு உள்ளது. அசுஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இந்திய கேமர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

    தற்போது நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் வால்வ் ஸ்டீம் டெக் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் வாங்க முடியும். எனினும், இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இவற்றின் விலை அதிகரிக்கும். மேலும் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை கிடைக்காது.

    இந்தியாவில் மொபைல் கேமிங் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அசுஸ் தனது ரோக் Ally மாடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது. இந்த கன்சோல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது சிறப்பான நகர்வாக இருக்கும் போதிலும், இவை சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை அவற்றின் விலை தான் முடிவு செய்யும்.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி AMD ரைசன் Z1 பிராசஸர் கொண்ட ரோக் Ally மாடலின் விலை ரூ. 71 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும், AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் பிராசஸர் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:

    அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது.

    விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கும் இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது. இதில் உள்ள டூயல் ஸ்பீக்கர் செட்டப், அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம், சிறப்பான ஆடியோவுடன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

    கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. அசுஸ் ரோக் Ally மாடலில் 40 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×