search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    7700 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய லெனோவோ டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்
    X

    7700 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய லெனோவோ டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

    • லெனோவோ டேப் M10 5ஜி மாடலில் முக அங்கீகார வசதி வழங்கப்பட்டு உள்ளது.
    • புதிய லெனோவோ டேப் M10 மாடலில் 7700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.

    லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப் M10 5ஜி மாடலில் 10.61 இன்ச் 2K ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. மாறாக முக அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 7700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கு வீடியோ ஸ்டிரீமிங் பேக்கப் வழங்குகிறது.

    லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:

    10.61 இன்ச் 2000x1200 பிக்சல் 2K எல்சிடி ஸ்கிரீன்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    4ஜிபி, 6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா, ToF சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன்

    5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி 2.0 டைப் சி

    7700 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    லெனோவோ டேப் M10 5ஜி டேப்லெட் அபைஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×