என் மலர்
புதிய கேஜெட்டுகள்
7 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்த நாய்ஸ்!
- நாய்ஸ் பட்ஸ் வெர்வ் இயர்பட்ஸ் ENC மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
- சார்ஜிங் கேஸ் சேர்த்து, இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேர பேக்கப் பெறலாம்.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் பட்ஸ் வெர்வ் என்று அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 500 விலை பிரிவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் இன்-இயர் ரக டிசைன், ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகின்றன. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. IPX5 தர சான்று பெற்று இருக்கும் நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலின் பல்வேறு அம்சங்களை, இயர்பட்ஸ்-இன் ஸ்டெம் பகுதியில் டச் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
ஆடியோவை பொருத்தவரை நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அழைப்புகளின் போதும், ஆடியோ தரம் மேம்படும். இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் லோ-லேடன்சி வசதியை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வசதி உள்ளது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டன்ட், 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் உடன் பெபில் வடிவம் கொண்ட ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு இயர்பட்ஸ்-இல் 45 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.
இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கார்பன் பிளாக், கிளவுட் வைட் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.