search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி - புதிய நோக்கியா போன் அறிமுகம்
    X

    இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி - புதிய நோக்கியா போன் அறிமுகம்

    • நோக்கியா 106 மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • நோக்கியா 106 மாடலில் இன்பில்ட் MP3 பிளேயர், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி உள்ளது.

    இந்திய சந்தையில் நோக்கியா 105 (2023) மற்றும் நோக்கியா 106 4ஜி மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா போன்களில் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷனின் 123PAY சப்போர்ட் உள்ளது. இதை கொண்டு யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதில் வயர்லெஸ் எஃப்எம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

    நோக்கியா 105 மற்றும் நோக்கியா 106 4ஜி மாடல்களில் 1.8 இன்ச் QQVGA டிஸ்ப்ளே மற்றும் பாலிகார்போனேட் நானோ பில்டு கொண்டிருக்கிறது. இத்துடன் IP52 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. நோக்கியா 105 மாடலில் 1000 எம்ஏஹெச் பேட்டரியும், நோக்கியா 106 மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் இயங்கும் எஃப்எம் ரேடியோ, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்பில்ட் யுபிஐ 123PAY சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் இணைய வசதி இல்லாமல், யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும்.

    நோக்கியா 106 மாடலில் இன்பில்ட் MP3 பிளேயர், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, வாய்ஸ் ரெக்கார்டர், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியா 105 மாடலில் உள்ள 1000 எம்ஏஹெச் பேட்டரி, 12 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. நோக்கியா 106 4ஜி மாடலில் உள்ள 1450 எம்ஏஹெச் பேட்டரி, 8 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது.

    நோக்கியா 105 மாடல் சார்கோல், சியான் மற்றும் ரெட் டெரகோட்டா என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 106 4ஜி மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×