search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    வண்டு-தவளை.. புது டீசர் வெளியிட்ட நத்திங் - எதற்கு தெரியுமா?
    X

    வண்டு-தவளை.. புது டீசர் வெளியிட்ட நத்திங் - எதற்கு தெரியுமா?

    • தவளை, வண்டு உள்ளிட்டவைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விரைவில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

    நத்திங் நிறுவனம் ஏப்ரல் 18 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக டீசரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசரின்படி புதிய சாதனம் நத்திங் இயர் 3 மாடலாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    டீசரில் தவளை மற்றும் வண்டு உள்ளிட்டவைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது. எனினும், இயர்பட்ஸ் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. நத்திங் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தொடர்ந்து நத்திங் இயர்பட்ஸ் பற்றிய விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, நத்திங் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சாதனம் இயர்பட்ஸ் ஆகவே இருக்கும்.


    பொதுவாக பி.ஐ.எஸ். வலைதளத்தில் சான்று பெறும் சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அப்படியாக சமீபத்தில் சான்று பெற்றுள்ள நத்திங் இயர்பட்ஸ், இயர் 3 மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    நத்திங் நிறுவனத்தின் மற்ற மாடல்களை போன்றே புதிய இயர் 3 மாடலிலும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், ஸ்டெம் ஸ்டைல் டிசைன், சதுரங்க வடிவம் கொண்ட கேஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இயர் 2 மாடலில் LDAC கோடெக் சப்போர்ட், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது.

    டிசைன் மட்டுமின்றி நத்திங் இயர் 3 மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும், நத்திங் நிறுவனம் புதிய டீசர் தொடர்பாக வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் படிப்படியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×