search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    8 ஜிபி ரேம் கொண்ட புது ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    8 ஜிபி ரேம் கொண்ட புது ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ A78 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 6.56 இன்ச் HD+ ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் கேமரா மாட்யுலை சுற்றி பாலிஷ் செய்யப்பட்ட ரிங்குகள் உள்ளன. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்படுகிறது.

    ஒப்போ A78 5ஜி அம்சங்கள்:

    6.5 இன்ச் 1612x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

    மாலி-G57 MC2 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ A78 5ஜி ஸ்மார்ட்போன் குலோயிங் புளூ மற்றும் குலோயிங் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ரிடெயில் அவுட்லெட், ஒப்போ இ ஸ்டோர் மற்றும் அமேசானில் ஜனவரி 18 ஆம் தேதி துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு அதிகபட்சம் 10 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ஆறு மாதங்களுக்கு தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×