search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    60 மணி நேர பிளே பேக் வழங்கும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் ரூ. 599-க்கு அறிமுகம்
    X

    60 மணி நேர பிளே பேக் வழங்கும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் ரூ. 599-க்கு அறிமுகம்

    • பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    பிடிரான் பேஸ்பட்ஸ் Nyx மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனம் புதிய நெக்பேண்ட் இயர்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் தலைசிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் அழகிய டிசைன் கொண்டுள்ளது.

    புதிய டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் மாடல் அல்ட்ரா-ஃபிலெக்சிபில் ஃபிட், பவர்ஃபுல் பேஸ், நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்போனில் ட்ரூடாக் DSP ENC காலிங் மற்றும் ஆப்ட்சென்ஸ் ரெட்யுஸ்டு லேடென்சி கேமிங் என இரண்டு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் ட்ரூடாக் அம்சம் அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கேட்பதை உறுதிப்படுத்துகிறது.

    ஆப்ட்சென்ஸ் அம்சம் கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் அதிக உண்மைத்தன்மையான சவுண்ட் வழங்குவதோடு, 40 மில்லிசெகண்ட் வரை லோ லேடன்சி கொண்டுள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் மற்றும் 10 மில்லிமீட்டர் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டிராங் பேஸ் கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் பத்து நிமிட சார்ஜிங் செய்தால் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    இதில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் IPX4 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் தோள்களின் மீது கச்சிதமாக பொருந்திக் கொள்வதோடு, இயர்போன்களில் காந்த சக்தி உள்ளது. இதனால் இரு இயர்போன்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதில் உள்ள பில்ட்-இன் மைக் மற்றும் மல்டி-கண்ட்ரோல் பட்டன் மூலம் வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மியூசிக் மற்றும் அழைப்புகளை இயக்கலாம்.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் தற்போது ரூ. 599 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 799 ஆகும். இதன் விற்பனை அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×