search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    144Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் G3x ஜென் 1 பிராசஸர் - ஸ்மார்ட்போன் வடிவில் கேமிங் கன்சோல் அறிமுகம்
    X

    144Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் G3x ஜென் 1 பிராசஸர் - ஸ்மார்ட்போன் வடிவில் கேமிங் கன்சோல் அறிமுகம்

    • ரேசர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் அளவு கொண்ட புதிய கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய கேமிங் கன்சோல் 5ஜி கனெக்டிவிட்டி, 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ரேசர் நிறுவனம் ரேசர் எட்ஜ் 5ஜி சாதனத்தை ரேசர்கான் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. குவால்காம் மற்றும் வெரிசன் நிறுவனங்கள் கூட்டணியில் இந்த கேமிங் கன்சோலை ரேசர் உருவாக்கி இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய கேமிங் கன்சோல் ஸ்மார்ட்போன் அளவில் கைகளில் வைத்துக் கொண்டு விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கேமிங் கன்சோலில் AAA கேம்கள், ஆண்ட்ராய்டு கேம்களான ஃபார்ட்நைட், ராக்கெட் லீக் சைடுஸ்வீப் உள்ளிட்டவைகளையும் விளையாடலாம். எபிக் கேம்ஸ் லான்ச்சர் மூலம் இந்த கேம்கள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே கிடைக்கிறது. கிளவுட் ஸ்டிரீமிங் சேவைகளான NVIDIA ஜீபோர்ஸ் நௌ மற்றும் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் உள்ளிட்டவையும் ரேசர் எட்ஜ் 5ஜி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் ரிமோட் பிளே ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பிசி லைப்ரரி அக்சஸ் ஸ்டிரீம் லின்க், மூன்லைட், பார்செக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.

    ரேசர் எட்ஜ் 5ஜி அம்சங்கள்:

    6.8 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    ஸ்னாப்டிராகன் G3x ஜென் 1 பிராசஸர்

    8 ஜிபி LPDDR5 ரேம்

    128 ஜிபி UFS 3.1 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

    5MP செல்பி கேமரா

    5ஜி, வைபை 6E, ப்ளூடூத் 5.2

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய ரேசர் எட்ஜ் 5ஜி-யுடன் ரேசர் கிஷி வி2 ப்ரோ கண்ட்ரோல்ர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அமெரிக்காவில் ரேசர் எட்ஜ் 5ஜி விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 856 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ரேசர் எட்ஜ் 5ஜி மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    இத்துடன் ரேசர் எட்ஜ் ஃபவுண்டர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ரேசர் ஹாமர்ஹெட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் விலை 499 டாஸர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 091 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்குகிறது.

    Next Story
    ×