என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்
அதிக மெமரி, மிக மெல்லிய டிசைனுடன் PS5 ஸ்லிம் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
- இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.
- பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ். 5 கன்சோல் டிஸ்க் மற்றும் டிஸ்க்-லெஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ். 5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. எனினும், இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்க சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளே ஸ்டேஷன் 5 வெளியான மூன்று ஆண்டுகள் கழித்தே பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
பெயருக்கு ஏற்றார்போல் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அதன் முந்தைய மாடலை விட மெல்லியதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பிளே ஸ்டேஷன் 5 மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை பி.எஸ். 5 மாடல் 104mm x 390mm x260mm என்றும் பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 96mm x 358mm x216mm அளவு கொண்டிருக்கிறது.
இரு மாடல்களிடையே குறிப்பிடத்தக்க வித்தியாசமாக பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 1 டி.பி. ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. பி.எஸ். 5 மாடலில் 825 ஜி.பி. ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி பி.எஸ். 5 ஸ்லிம் அம்சங்கள்:
சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலில் x86-64-AMD Ryzen Zen 2 CPU மற்றும் AMD Radeon RDNA 2 சார்ந்த கிராஃபிக்ஸ் என்ஜின், ரே டிரேசிங் அக்செல்லரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. ஸ்டோரேஜ், இரண்டு யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 4K 120Hz டி.வி. மற்றும் 8K டி.வி.க்களிலும் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் மாடலில் பி.எஸ். 4 கேம்களையும் விளையாட முடியும். இதில் டெம்பெஸ்ட் 3டி ஆடியோ தொழில்நுட்பம், 60Fps-இல் 4K கேமிங், ரே டிரேசிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் டிஸ்க் மற்றும் டிஸ்க் லெஸ் வெர்ஷன்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் உள்ளன.
விலை, விற்பனை விவரங்கள்:
சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலின் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் டிஸ்க் வெர்ஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்