search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    புதிதாக கையடக்க பிளேஸ்டேஷன் உருவாக்கும் சோனி... வெளியான சூப்பர் தகவல்!
    X

    புதிதாக கையடக்க பிளேஸ்டேஷன் உருவாக்கும் சோனி... வெளியான சூப்பர் தகவல்!

    • சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் போர்டபில் சாதனம் உலகளவில் பிரபலமான கேமிங் சாதனமாக விளங்கியது.
    • சோனி உருவாக்கி வரும் புதிய கையடக்க சாதனம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    சோனி நிறுவனம் முற்றிலும் புதிய கையடக்க பிளேஸ்டேஷன் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கையடக்க பிளேஸ்டேஷன், Q லைட் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சோனியின் புதிய கேமிங் ஹார்டுவேர் பிளேஸ்டேஷன் 5 சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய Q லைட் சாதனம் கையடக்க பிளேஸ்டேஷன் போன்றே செயல்படும். இது பிளேஸ்டேஷன் 5 ரிமோட் பிளே அம்சத்தில் இயங்குகிறது. இந்த சாதனம் அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் நொடிக்கு 60 ஃபிரேம் வேகத்தில் கேம் ஸ்டிரீம் செய்யும். ஆனால் இவ்வாறு செய்ய சீரான இணைய இணைப்பு அவசியம் ஆகும். தோற்றத்தில் Q லைட் பார்க்க பிளேஸ்டேஷன் 5 கண்ட்ரோலர் போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், இதில் 8 இன்ச் LCD டச் ஸ்கிரீன், அடாப்டிவ் ட்ரிகர்கள் உள்ளன. தற்போது இந்த Q லைட் சாதனத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளதாக இன்சைடர் கேமிங் தெரிவித்து இருக்கிறது. இது சோனி பிளேஸ்டேஷன் 5 கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் வெளியீட்டை தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. Q லைட் வெளியீட்டை தொடர்ந்து பிளேஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் விஆர் 2 சாதனத்தை அறிமுகம் செய்து இருந்தது. இது மெல்லிய டிசைன் மற்றும் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் தான் புதிதாக கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் பிளேஸ்டேஷன் 5, வயர்லெஸ் இயர்போன், ஹெட்செட் மற்றும் Q லைட் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×