search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பட்ஜெட் விலையில் புது ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்
    X

    பட்ஜெட் விலையில் புது ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

    • காட்சிகளை 356 சென்டிமீட்டர்கள் அளவுக்கு பெரிதாக ஒளிபரப்பும்.
    • ஐஓஎஸ்-இல் ஸ்கிரீன் மிரரிங் வழங்குகிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ரொஜெக்டர் மாடல்: ஜெப் பிக்சாபிளே 54 ஸ்மார்ட் எல்இடி-ஐ அறிமுகம் செய்தது. கடந்த ஜூன் மாதம் ஜெப் பிக்சாபிளே 22 ஸ்மார்ட் எல்இடி ப்ரோஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பிக்சாபிளே 54 மாடலில் 3800 லூமென்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தரவுகளை அதிக பிரகாசமாக வெளிப்படுத்தச் செய்யும். இதனால் சிறப்பான காட்சி அனுபவம் கிடைக்கும். இந்த ப்ரோஜெக்டர் FHD (1080 பிக்சல்) ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இது காட்சிகளை 356 சென்டிமீட்டர்கள் அளவுக்கு பெரிதாக ஒளிபரப்பும்.

    குவாட்கோர் பிராசஸர் கொண்டிருக்கும் பிக்சாபிளே 54 மாடல் சீராக இயங்குவதோடு, சிறப்பான நேவிகேஷன் வழங்குகிறது. செயலிகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கும் புதிய ஜெப்ரானிக்ஸ் ப்ரோஜெக்டர் ஸ்கிரீன் மிரரிங் வசதியை வழங்குகிறது. மிராகேஸ்ட் மற்றும் ஐஓஎஸ்-இல் ஸ்கிரீன் மிரரிங் வழங்குகிறது.

    இந்த ப்ரொஜெக்டருடன் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் வசதி உள்ளது. இதனால் ப்ரோஜெக்டரை செட்டப் செய்வது மிகவும் எளிமையான காரியம் தான். இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் உள்ளது. இது நீண்ட காலம் உழைக்கும் திறன் கொண்டுள்ளது. கனெகிடிவிட்டிக்கு இந்த ப்ரோஜெக்டரில் ப்ளூடூத் 5.1, ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் அவுட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிறது.

    மேலும் இதில் பில்ட்-இன் ஸ்பீக்கர் உள்ளதால் தெளிவன ஆடியோ வழங்குகிறது. இதனை ஜெப்ரானிக்ஸ் சவுன்ட்பார்களுடன் செட்டப் செய்தும் பயன்படுத்தலாம். இவைதவிர டூயல் பேண்ட் வைபை, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லென்ஸ் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×