search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    108MP கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான போக்கோ M6
    X

    108MP கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான போக்கோ M6

    • பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் போகோ (Poco), அதன் மலிவு விலை மொபைலான M6 Pro 5G-ன் புதிய வேரியன்ட்டை கடந்த ஆண்டு வெளியிட்டது.
    • இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்ட் போகோ M6 மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

    பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் போகோ (Poco), அதன் மலிவு விலை மொபைலான M6 Pro 5G-ன் புதிய வேரியன்ட்டை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்ட் போகோ M6 மாடலை தற்போது அறிமுகம் செய்தது. புதிய M6 மாடலில் உள்ள அம்சங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இது ரெட்மி 13 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்ட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

    போகோ M6 அம்சங்கள்:

    6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன்

    13 MP செல்ஃபி கேமரா

    108 MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ கேமரா f/2.4 aperture LED ஃபிளாஷ்

    மீடியாடெக் ஹீலியோ ஜி91- அல்ட்ரா பிராசஸர்

    ஹைபிரிட் டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ்.

    ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5030 mAh பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ

    டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, GPS + GLONASS

    யு.எஸ்.பி. டைப் சி, NFC

    போகோ M6 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் என்றும், 8 ஜிபி +256 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரம் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×