என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
X
மும்பை வர்த்தக கட்டிடத்தில் ஆப்பிள் இந்தியா அலுவலகம் - வாடகையை மட்டும் கேட்காதீங்க
Byமாலை மலர்21 Jan 2025 11:58 AM IST
- பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) 6,526 சதுர அடியை குத்தகைக்கு எடுத்துள்ளது.
- வணிக பயன்பாட்டுக்கான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாடகையில் ஆப்பிள் இந்தியா புதிய இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) 6,526 சதுர அடி இடத்தை ஒரு சதுர அடிக்கு ரூ.738 மாத வாடகைக்கு எடுத்துள்ளது என்று சொத்துப் பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு மாத வாடகை மட்டுமே ரூ.48.19 லட்சம் ஆகும்.
Proptstack.co ஆவணங்களின்படி, கலிபோர்னியாவின் குபெர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் இந்திய பிரிவு, ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடட்,Maker Maxity-5 என்ற கட்டிடத்தில் வணிக பயன்பாட்டுக்கான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது. டிசம்பர் 31 2028 வரை இந்த குத்தகை தொடரும்.
Next Story
×
X