என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஒட்டுக் கேட்ட விவகாரம்.. பயனர்களுக்கு ரூ. 1700 வழங்கும் ஆப்பிள் - யார் யாருக்கு கிடைக்கும்?
- விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் மீது குற்றச்சாட்டு.
- ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில் 95 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 815 கோடி) இழப்பீடு வழங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனை ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. எனினும், சிரி சேவையை பயன்படுத்துவோரின் தனியுரிமை சார்ந்த விஷயம் என்பதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயனர்கள் 20 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1700 பெறுவர்.
கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ரத்து செய்யப்பட்டு விட்டது.
எனினும், பயனர்கள் ஆப்பிள் நிறுவனம் சிரி உரையாடல்களை பதிவு செய்வதாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சிலர் தங்களை குறிவைத்து விளம்பரங்கள் வருவதை கண்டறிந்தனர். பின்னர் இதை உறுதிப்படுத்த அவர்கள் சிரியிடம் சில உரையாடல்களை மேற்கொண்டனர். பிறகு, உரையாடல்கள் சார்ந்த விளம்பரங்கள் ஐபோனில் வருவதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 815 கோடியை இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்ர் 17, 2014 ஆம் ஆண்டு துவங்கி டிசம்பர் 31 ஆம் தேதி 2024 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் பாதிக்கப்பட்ட பயனர் ஒவ்வொருத்தருக்கும் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது.