என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது
- சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, மீண்டும் செயல்பாட்டு வந்தது.
- தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சேவை முடங்கியதாக இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
"தொழில்நுட்ப குறைபாடு காரணமாக பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாத நிலையை எதிர்கொண்டனர். இந்த குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைந்து பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம்," என்று மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தனயார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இது குறித்து முடங்கிய வலைதளங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் டவுன்டிடெக்டர் வலைதளத்தில், இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது.