search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இண்டெல் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் - டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை இரங்கல்
    X

    இண்டெல் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் - டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை இரங்கல்

    • ஜார்டன் மூரெ தொழில்நுட்ப துறையில் முன்னோடியாக விளங்கினார்.
    • சிலிகான் வேலியில் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார்.

    இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் உயிரிழிந்தார். இன்று புழக்கத்தில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக மூலக் காரணமாக விளங்கியவர்களில் ஜார்டன் மூரெ இடம்பெற்று இருந்தார். மார்ச் 24 ஆம் தேதி அமைதியான முறையில் இவரின் உயிர் பிரிந்ததாக இண்டெல் நிறுவன வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மரணிக்கும் தருவாயில் ஜார்டன் மூரெ அவரின் குடும்பத்தாருடன் ஹவாயில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். சிலிகான் வேலியில் மதிப்புமிக்க நபர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார். ஜார்டன் மூரெ மறைவுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    "இந்த உலகம் மிகப்பெரிய மனிதரான ஜார்டன் மூரெ இழந்துள்ளது. இவர் சிலிகான் வேலியை உருவாக்கிய தந்தைகளில் ஒருவர் ஆவார். தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்த உதவியர்களில் இவரும் ஒரவர் ஆவார். இவர் பின்பற்றிய நாம் அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்," என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

    "ஆர்.ஐ.பி. ஜார்டன் மூரெ. இவரின் இலட்சியம் நம்மை போன்று பலருக்கு தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்த தூண்டியது. இவர் எனக்கு தூண்டுகோளாக இருந்துள்ளார். இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் இண்டெல் நிறுவனத்தார் அனைவருக்கும் இரங்கல்கள்," என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    1968 ஜூலை மாத வாக்கில் இண்டெல் நிறுவனத்தை ஜார்டன் மூரெ மற்றும் ராபர்ட் நைஸ் இணைந்து துவங்கினர். இருவரும் நீண்டகால நண்பர்கள் ஆவர். மூரெ இண்டெல் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராக பணியாற்றி வந்தார். பின் 1979 ஆம் ஆண்டு இவர் இண்டெல் நிறுவன நிர்வாக குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

    Next Story
    ×