search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    உலகின் பெரிய ஆலையில் ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் சரியும் அபாயம்
    X

    உலகின் பெரிய ஆலையில் ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் சரியும் அபாயம்

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு சாதனங்கள் சீனா ஆலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவன சாதனங்களின் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஆப்பிள் மாற்றி வருகிறது.

    சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி சரியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி இலக்குகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையான செங்சௌ-வில் அடுத்த மாதத்திற்கான ஐபோன் உற்பத்தி 30 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஆலையில் குறையும் ஐபோன் உற்பத்தியை ஓரளவு ஈடுசெய்ய ஷென்சென் ஆலையில் பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷென்செனில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல பணியாளர்கள் சில நாட்களுக்கு முன் ஆலையை விட்டு வெளியேறினர்.

    உலகளவில் மின்சாதன பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இடர்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதுதவிர மற்ற ஆலைகளுடன் தொடர்பு கொண்டு உற்பத்தி சரிவை முடிந்த வரை ஈடுகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

    உற்பத்தி சரிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. செங்கௌ ஆலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×