என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அறிந்து கொள்ளுங்கள்
17 மாநிலங்கள், 50 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவைகள் - ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.
"17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
"டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.