search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ X40
    X

    கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ X40

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக மோட்டோ X40 ஸ்மார்ட்போனின் டீசர்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ X40 ஸ்மார்ட்போனினை டிசம்பர் 15 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன், டீசர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. இந்த நிலையில், மோட்டோ X40 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.

    கீக்பென்ச் 5 டேட்டாபேஸ்-இல் இடம்பெற்று இருந்த மோட்டோ X40 ஸ்மார்ட்போன் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. லிஸ்டிங்கின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13, 12 ஜிபி ரேம் கொண்டிருகும் என கீக்பென்ச் விவரங்களில் தெரியவந்து இருக்கிறது. சிங்கில் கோரில் இந்த ஸ்மார்ட்பஓன் 1471 புள்ளிகளையும், மல்டி கோரில் 4683 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இவை திவர மோட்டோ X40 பற்றி கீக்பென்ச் தளத்தில் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    எனினும், முந்தைய தகவல்களில் மோட்டோ XT2301-5 மாடலில் 125 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை வெளியான விவரங்களின் படி மோட்டோ X40 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், LPDDR5X ரேம், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×