search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    உஷாரான நெட்ஃப்ளிக்ஸ் - இனி இப்படி செய்ய முடியாது!
    X

    உஷாரான நெட்ஃப்ளிக்ஸ் - இனி இப்படி செய்ய முடியாது!

    • நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஒடிடி தளமாக விளங்குகிறது.
    • கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. பாஸ்வேர்டு ஷேரிங் வியாபாரத்தை நிறுத்தும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதற்கு முடிவுகட்டும் இலக்கை நெட்ஃப்ளிக்ஸ் அடைய இருக்கிறது.

    அடுத்த ஆண்டு துவக்கம் முதலே நெட்ஃப்ளிக்ஸ் அதன் பயனர்கள் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க போவதில்லை. இது குறித்த தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்களது குடும்பத்தார் தவிர வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் வேற்று நபர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படாது. பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாக கண்டறிந்து வருகிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் சந்தா முறை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஸ்வேர்டு ஷேரிங் பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும், சந்தாதாரர்கள் குறைய துவங்கும் வரை இந்த பிரச்சினை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த ஆண்டு வருவாய் சரிய துவங்கியதில் இருந்து பாஸ்வேர்டு ஷேரிங்கிற்கு முடிவு கட்ட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரமாக செயல்பட துவங்கி இருக்கிறது.

    சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாஸ்வேர்டு ஷேரிங்கை நிறுத்தவும் நெட்ஃப்ளிக்ஸ் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் பகுதியாகவே நெட்ஃப்ளிக்ஸ்-இல் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மாதம் 6.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் நெட்ஃப்ளிக்ஸ் - மொபைல் ஒன்லி, பேசிக் பிலான், ஸ்டாண்டர்டு பிலான் மற்றும் பிரீமியம் பிலான் என நான்கு சந்தாக்களை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 149, ரூ. 199, ரூ. 499 மற்றும் ரூ. 649 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×