search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    நவம்பர் 1 முதல் OTP மெசேஜ் வராது?.. ஏர்டெல் - ஜியோ- வி.ஐ. பயனர்களுக்கு சிக்கல்
    X

    நவம்பர் 1 முதல் 'OTP' மெசேஜ் வராது?.. ஏர்டெல் - ஜியோ- வி.ஐ. பயனர்களுக்கு சிக்கல்

    • இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
    • வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுகிறது.

    ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஓடிபி [OTP] எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள், டெலிகாம் சேவைகள் என பல துறைகளில் ஓடிபி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஓடிபி மெசேஜ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.

    ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அந்த அந்த விதிப்படி எல்லா ஓடிபி மெசேஜ்களையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும்.

    இதனால் தங்களுக்கு அனுப்பும் ஓடிபிகளை பயனர்களால் பார்க்க முடியாது. வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுத்தப்படும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஓடிபிகளை நேரடியாக அல்லாமல் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி எண்களை அனுப்புகிறது.

    எனவே அவ்வாறு செயல்படும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த மெசேஜ்கள் தடைபடும். தற்போதுள்ள பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த சிக்கல் உள்ளது.

    குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் சார்ந்திருக்கும் டெலி மார்கெட்டிங்கில் இந்த சிக்கல் உள்ளதால் அந்த அவற்றின் ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இந்நிறுவனங்கள் டிராய் இடம் கோரிக்கை வைத்துள்ளது.

    Next Story
    ×