என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
அறிந்து கொள்ளுங்கள்
![ட்விட்டர் புளூ ஐஒஎஸ் இந்திய விலை இவ்வளவா? இணையத்தில் லீக் ஆன தகவல்! ட்விட்டர் புளூ ஐஒஎஸ் இந்திய விலை இவ்வளவா? இணையத்தில் லீக் ஆன தகவல்!](https://media.maalaimalar.com/h-upload/2022/12/13/1806272-twitter.webp)
ட்விட்டர் புளூ ஐஒஎஸ் இந்திய விலை இவ்வளவா? இணையத்தில் லீக் ஆன தகவல்!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ட்விட்டர் புளூ பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை வழங்கி வெரிஃபை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- தற்போதுள்ள புளூ செக்மார்க்குகள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்திய பயனர்களுக்கான ட்விட்டர் புளூ சந்தா விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதுபற்றி ட்விட்டர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சிறு இடைவெளிக்கு பின் ட்விட்டர் புளூ மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ட்விட்டர் புளூ இந்திய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் ரூ. 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த சேவைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவின் விலை அதிகமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
சர்வதேச சந்தையில் ட்விட்டர் புளூ ஐஒஎஸ் விலையை ஒப்பிடும் போது இந்திய விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்தியா தவிர தற்போது ட்விட்டர் புளூ சேவை வெளியிடப்பட்டு இருக்கும் நாடுகளில் ஐஒஎஸ் பயனர்கள் மாத சந்தாவாக 11 டாலர்கள் செலுத்த வேண்டும். ட்விட்டர் வெப் பயனர்கள் மாதம் 7 டாலர்கள் வரை சந்தாவாக செலுத்த வேண்டும் என தெரிகிறது. எனினும், இது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
ட்விட்டர் புளூ சந்தாவில் பயனர்களுக்கு, ட்விட்களை எடிட் செய்யும் வசதி, 1080 பிக்சல் தரத்தில் வீடியோ அப்லோடு செய்யும் வசதி, ரீடர் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ட்விட்டர் வெரிஃபிகேஷன் செக்மார்க்குகள் புது நிறங்களில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி வியாபாரங்கள் மற்றும் கோ-ஆபரேஷன்களுக்கு கோல்டு நிறமும், அரசு, சர்வதேச அக்கவுண்ட்களுக்கு கிரே நிறமும் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தா அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.