search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    நாளை துவங்கும் ஆப்பிள் WWDC-யில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
    X

    நாளை துவங்கும் ஆப்பிள் WWDC-யில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

    • புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது.
    • டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2024 நிகழ்ச்சி நாளை ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 18, ஐ- பாட் OS 18, மாக் OS 15, வாட்ச் OS 11, டிவி OS 18 மற்றும் விஷன் OS 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த வருட நிகழ்வில் ஆப்பிள் செயலிகளிலிலும், சேவைகளிலும் ஆக்கபூர்வமான வகையில் ஏ.ஐ தொழிநுட்பத்தை பயணவபடுத்துவது குறித்தும், பயனர்களின் தனியுரிமையையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் ஆப்பிள் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிகழ்வில் ஐ-போன், ஐ- பட மற்றும் மாக் ஆகிய சாதனங்களில் புதியதாக ஒருங்கிணைந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓபன் ஏஐ, சாட் ஜிபிடி செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யும்.

    ஆப்பிளின் புதிய தொழில்நுட்பமான ஏ.ஐ யில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பயனர்களின் தினசரி பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளில் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்படும். ஆப்ட் இன் மற்றும் பீட்டா மென்பொருள் கொண்ட சாதனங்களிலும் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை அடையலாம்.

    ஆப்பிள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ ஐ கருவிகள் ஆகியவற்றை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ராசஸிங்கில் செய்ய பயன்படுத்தலாம். மேம்படுதிகப்பட்ட இந்த ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், இணையதள பக்கங்கள் ஆகியவற்றின் சுருக்கங்களை இந்த புதிய ஏஐ பயனர்களின் பார்வைக்கு வழங்கும். இதன்மூலம் எளிதில் அனைத்தையும் குறித்த சுருக்கங்களை விரைவில் அறிய முடியும்.

    மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பயனர்களுக்கு அறிவுறுத்தும் வசதியில் ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது.

    ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அசிஸ்டண்டாக செயல்ப்படும் 'சிரி' ஏஐ மூலம் மேம்படுத்தபடும். முக்கியமாக ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் அடுத்த வருடத்துக்குள் சிரி தயாராகிவிடும் என்ற கூடுதல் தகவலையும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    ஜிமெயிலில் இருப்பதைப் போல இமெயிலிலும் மெயில்களை தானாக வகைப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. மெசேஜ்கள் மற்றும் சாட் - களில் டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெமோ அனுப்புவது, புகைப்பட செயலிகளில் எடிட்டிங்கை எளிமையாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஏஐ யில் அடங்கும்.

    அதுமட்டுமின்றி பல்வேறு மென்பொருள் அப்டேட்களும் நாளைய நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளது. அதன்படி iOS 18 ஹோம் ஸ்க்ரீன், கன்ட்ரோல் சென்டர், செட்டிங்ஸ் செயலி, மெசேஜிங் செயலி, பாஸ்வேர்டு நிர்வகிக்கும் செயலி, காலகுக்கேட்டார், காலெண்டர் ஆகிய செயலிகளும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட், ஆப்பிள் வாட்ச், மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றில் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×