search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஒரே சமயத்தில் பல்வேறு ஐபோன்களில் பயன்படுத்தலாம்.. வாட்ஸ்அப்-இல் புதிய அப்டேட்!
    X

    ஒரே சமயத்தில் பல்வேறு ஐபோன்களில் பயன்படுத்தலாம்.. வாட்ஸ்அப்-இல் புதிய அப்டேட்!

    • புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
    • இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

    புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.

    சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×