search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் பலப்பரீட்சை
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் பலப்பரீட்சை

    • ஐந்து செட்கள் வரை சென்ற நீண்ட நேர ஆட்டத்தில் அல்காரஸ் சின்னெரை வீழ்த்தினார்.
    • முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த மூன்று செட்களையும் வரிசையாக கைப்பற்றினார் ஸ்வெரேவ்.

    பாரீஸ் நகரில் நடந்து வரும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

    இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியின் முதல் போட்டியில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சின்னெர் (இத்தாலி), 3-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் நீயா-நானா என்று ஆக்ரோஷமாக ஆடியதால் ஆட்டம் சூடு பிடித்தது.

    முதல் 4 செட்டுகளை இருவரும் தலா 2 வீதம் வசப்படுத்திய நிலையில், கடைசி செட் மேலும் பரபரப்பானது. ஆனால் இறுதி செட்டில் ஆரம்பத்திலேயே சின்னெரின் சர்வீசை அல்காரஸ் 'பிரேக்' செய்ததால் அவரது கை ஓங்கியது. அதில் இருந்து மளமளவென கேம்ஸ்களை கைப்பற்றி அல்காரஸ் வெற்றிக்கனியையும் பறித்தார்.

    4 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சின்னெரை வெளியேற்றி பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    2-வது அரையிறுதி போட்டியில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். இந்த போட்டி அந்த அளவிற்கு பரபரப்பாக செல்லவில்லை. முதல் செட்டை ரூட் 2-6 எனக் கைப்பற்றினார். அதன்பின் ஸ்வெரேவ் ஆட்டத்திற்கு ரூட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    அடுத்த மூன்று செட்டுகளையும் ஸ்வெரேவ் 6-2, 6-4, 6-2 என வரிசையாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால் நாளை நடைபெறம் இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் சாம்பியன் போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    Next Story
    ×