என் மலர்
டென்னிஸ்
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் சுமித் நாகல்
- கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சென்னை ஓபன் அரையிறுதியில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். இன்று ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
நாகல் கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் நவம்பர் மாதம் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது பார்முக்கு திரும்பி, 16 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அடுத்து சனிக்கிழமை நடைபெற உளள் அரையிறுதி ஆட்டத்தில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.