search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறும் அதிசயம்
    X

    அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறும் அதிசயம்

    • அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த திருவுருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • அதுபோல லாட சின்ன அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாவதை காணலாம்.

    காளத்தீஸ்வரர் கோவிலின் உபகோவிலாக லாட சின்னம்மன் கோவில் உள்ளது.

    இந்தகோவிலின் வடகிழக்கு திசையில் மணக்குள விநாயகர் கோவில் அருகே உள்ள லல்லிதொல்லாந்தல் தெருவில் அமைந்துள்ளது.

    வெளியில் இருந்து பார்த்தால் ஏதோ ஒரு மடம் போல் தோன்றும் இக்கோவில் உள்ளே சென்று பார்த்தால் ஆச்சரியப்படும்படி பழமை மாறாத வகையில் காட்சி அளிப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

    அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த திருவுருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    ராகு தலமான திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவான் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பாலானது கண்டத்தின் கீழே வரும்போது நீலநிறமாக மாறுவதை பார்க்கலாம்.

    அதுபோல லாட சின்ன அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாவதை காணலாம்.

    செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்ற எல்லா வித தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் பேரருள் வாய்ந்த அம்மனாக ஓடு வேய்ந்த சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.

    மற்ற அம்மன் கோவில்களை போல் அல்லாமல் இங்கு பாம்பு மேல் அமர்ந்த நிலையில் லாட சின்னம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கு 5 முதல் 10 வாரங்கள் வரை ராகுகாலத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.

    5 நெய் விளக்குகள் மற்றும் எலுமிச்சம் பழ விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    Next Story
    ×