என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/24/1955516-12.webp)
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.
- தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது.
19.01.2000 அன்று மகாசம்ப்ரோஷனம் நடந்தேறியது.
அருள்மிகு வைகுண்டநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருக்கும் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.
பெருமாளின் கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. இது ஓர் அபூர்வ அமைப்பு.
மேலும் மற்றொரு கையில் கணையாழி (மோதிரம்) காணப்படுகிறது.
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு சீதனமாக கணையாழியைக் கொண்டு வந்ததாக 'கர்ண பரம்பரை' வரலாறு கூறுகிறது.
பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.
அருகிலேயே ஸ்ரீமார்க்கண்டேய மாமுனியும் காட்சி தருகிறார்.
கருடாழ்வார் அபூர்வ அமைப்புகளுடன் காட்சி தருகிறார்.
தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.
ஸ்ரீ அனுமனுக்கு தனிச் சந்நிதியும், கனகவல்லித் தயாருக்கு தனிச்சந்நிதியும், ஸ்ரீஆண்டாளுக்கு தனிச்சந்நிதியும் பிரகாரத்துக்குள் அமைந்துள்ளன.
திருக்கோயிலின் நுழைவு வாயிலின் யாழிகள் இருபுறமும் அழகிய தோற்றத்துடன் அமைந்து காணப்படுகின்றன.
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் 'வைகானச' ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்திருக்கோயிலில் 3 கால பூஜைகள் நித்திய பூஜைகளாக நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி இவ்வாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.