என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
மனைவி மற்றும் தாயை காக்க ஹரதத்தரின் உருவில் வந்த அக்னீஸ்வரர்
- ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.
- அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.
ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.
அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.
அதைக் கண்டு கோபம் கொண்ட கமலாட்சி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள். நாயும் வெட்டுப்பட்டு இறந்தது.
ஹரதத்தர் இறந்த அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார்.
அதனால் அந்த நாய் நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.
தனது தாயார் காளை மாட்டை கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும், மனைவியார் நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார்.
பிராயச்சித்தம் என்ன வென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித் தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு நீராடச் சென்றார்.
வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச்சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன.
பஞ்சட்சர ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள்.
இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்ட போது அதற்கு அவர், தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்கு சென்றீர்கள்? என்றார்.
தம் உருவில் வந்து எழுதியது அக்னீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போது தான் புலப்பட்டது.