என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![மேல்மலையனூர்-மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்! மேல்மலையனூர்-மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்!](https://media.maalaimalar.com/h-upload/2023/08/27/1939107-mel-malayanur-amavasai.webp)
மேல்மலையனூர்-மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இங்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும்.
- அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.
மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்
மேல்மலையனூர் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதன் பின்னணியில் உள்ள வரலாறு
ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும்.
உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.
பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.
இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள்
அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.
இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள் படி நிறைவுபெறுகிறது.
ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.