search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்
    X

    முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்

    • தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
    • தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர்.

    உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.

    தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர்.

    இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.

    "அதிருங் கழல்பணிந்து னடியேனுன்

    அபயம் புகுவதென்று நிலைகாண

    இதயந்தனிலிருந்து க்ருபையாகி

    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

    எதிரங்கொருவரின்றி நடமாடும்

    இறைவன் தனது பங்கிலுமைபாலா

    பதியெங்கிலுமிருந்து விளையாடிப்

    பலகுன்றிலும மர்ந்த பெருமானே."

    சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்

    தவமுறை தியானம் வைக்க அறியாத

    சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த

    தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!

    கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு

    கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!

    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை

    கமழுமணமார் கடப்ப மணிவோனே

    தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய

    சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு

    தமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து

    தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!

    அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க

    அரிய தமிழ்தானளித்த மயில்வீரா

    அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த

    அழகதிருவேரகத்தின் முருகோனே!

    Next Story
    ×