search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நினைத்தாலே எழுந்தருளி வருவான் முருகன் என அருணகிரியார் பாடிய தலம்
    X

    நினைத்தாலே எழுந்தருளி வருவான் முருகன் என அருணகிரியார் பாடிய தலம்

    • இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
    • இவரை ‘ நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்’ என்கிறார்.

    'அண்டர்பதி குடியேற' என்ற முதல் திருப்புகழில் 'மகிமீற, மகிழ்கூற, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற' என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு.

    இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.

    'அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!' என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறுவாபுரி தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை.

    'சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவு பெருமாளே!' என்று இவரை 'எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்' எனக்கூறுகிறார் அருணகிரிநாதர்.

    Next Story
    ×