என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![சிறந்த வாழ்க்கைத்துணை அருளும் விநாயகர் சஷ்டி விரதம் சிறந்த வாழ்க்கைத்துணை அருளும் விநாயகர் சஷ்டி விரதம்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/18/1983410-04.webp)
X
சிறந்த வாழ்க்கைத்துணை அருளும் விநாயகர் சஷ்டி விரதம்
By
மாலை மலர்18 Nov 2023 2:26 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது.
- வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.
இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது.
இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை
மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும்
பெண்கள் இடது கையிலும் கட்டி கொள்கின்றனர்.
முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.
இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர்.
வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.
Next Story
×
X