search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவபெருமான் யோகியாகவும் போகியாகவும் விளங்கும் தத்துவம்
    X

    சிவபெருமான் யோகியாகவும் போகியாகவும் விளங்கும் தத்துவம்

    • அதாவது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.
    • அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமானது.

    ஒரு முறை அன்னை பார்வதிக்கு பெரிய சந்தேகம் வந்துவிட்டது.

    யோக தட்சிணாமூர்த்தியாக விளங்கும் இறைவன் போக மூர்த்தியாகவும் இருக்கும் காரணம் என்ன என்ற ஐயத்தை எழுப்பினாள்.

    ஐயன் உடனே அதற்குப் பதில் சொல்லவில்லை.

    பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தில் தவமியற்றுமாறும் உரிய நேரத்தில் தாம் வந்து அன்னையின் ஐயத்தைத் தீர்ப்பதாகவும் கூறிவிட்டார்.

    அதன்படியே அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.

    தன் தவ வலிமையால் நீரை திரட்டி லிங்கமாக்கி பூசித்து வரலானாள்.

    அதாவது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.

    அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்" தலமானது.

    நீரின் வடிவமாக விளங்கியதால் இறைவனுக்கு அப்புலிங்கம் என்ற திருநாமமும் ஏற்பட்டது.

    உரிய காலத்தில் இறைவன் தோன்றி உலகம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் யோகம் போகம் இரண்டுமே அவசியம் என்பதை உலக ஆன்மாக்களுக்கு உணர்த்த முடிவு செய்தார்.

    இதற்காகவே தான் யோகியாகவும் போகியாகவும் இருக்க வேண்டியுள்ளது என்னும் உண்மையை உணர்த்துகிறார்.

    Next Story
    ×