search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சூட்சும லிங்கமான கொடிமரத்தின் சிறப்பு
    X

    சூட்சும லிங்கமான கொடிமரத்தின் சிறப்பு

    • இது ‘சூட்சும லிங்கம்’ எனவும் வழங்கப்படும்.
    • கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.

    அன்பர் மனத்தில் அண்டவெளி பராசக்தியை ஈர்த்துக் கொடுக்க வல்லது கொடி மரம் ஆகும்.

    இது 'சூட்சும லிங்கம்' எனவும் வழங்கப்படும்.

    கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது.

    அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலகலத்து கொண்டு இருக்கின்றன.

    கொடி மரத்தின் கிழக்கு பகுதியில் நர்த்தன விநாயகரும், தெற்கு வடக்கு முறையே பார்வதி பரமேசுவரனும், வள்ளி தெய்வானையுடன் முருகரும், மேற்கே சிவனை பார்த்தவாறு லிங்கோத்பவரும் செப்பு தகட்டில் பதிக்கப்பட்டு அமைந்துள்ளனர்.

    பலிபீடத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கிய உடனே கொடி மர உச்சியை அண்ணாந்து நோக்கும் அமைப்பை எண்ணிப் பார்த்தால் "பணிவு உண்டாயின் உயர் பதவி உண்டாகும்.

    புகழ் வானளாவ விரிந்து நிற்கும்" என்ற கருத்து நமக்கு மிக எளிதில் விளங்கி விடுகின்றது.

    மண்ணையும், விண்ணையும் இணைக்கின்ற ஒரு சிறப்பு கொடி மரத்துக்கு உண்டு.

    2 கோவில்களிலும் கொடி மரம், பலி பீடம், கோபுரம் என தனித் தனியாக இருப்பினும், ஒரு கோவிலின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ளது சிறப்பு கொண்டதாகும்.

    Next Story
    ×