என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் கோவில் சுவர்களிலுள்ள கல்வெட்டுக்கள்:
- சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.
- மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன.
சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.
பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது.
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.
மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.
முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான்.
இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.