search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    உத்திரகோசமங்கை மற்றும் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம்
    X

    உத்திரகோசமங்கை மற்றும் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம்

    • ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.
    • கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தரகோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார். அந்த 4 தாண்டவங்கள் வருமாறு:

    (1) ஆனந்த தாண்டவம்

    (2) சந்தியத் தாண்டவம்

    (3) சம்விஹார தாண்டவம்

    (4) ஊர்த்துவத் தாண்டவம் ஆகும்.

    அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று. அவை

    (1) திரிபுரந்தர தாண்டவம்

    (2) புஜங்கத் தாண்டவம்

    (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை க்காண்பது விசேஷம்.

    இந்த ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள்.

    இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.

    ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

    அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு.

    முக்தி கிடைக்க வழி செய்யும்.

    Next Story
    ×